Trending News

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இரண்டாம் நாள் இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2019” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று(29) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

“சமகால பாதுகாப்பு தேவைகளுக்கு மத்தியில் இராணுவத்தினரின் மகத்தான பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு இன்றும் கொழும்பில் இடம்பெறுகிறது.

நிபுணத்துவ கலந்துரையாடலுக்கு தளம் அமைத்துக்கொடுக்கும் வகையில் இரு நாட்கள் இடம்பெறுகின்ற 2019 கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் 13 வெளிநாட்டு புத்திஜீவிகள், 12 உள்நாட்டு புத்திஜீவிகள் உள்ளடங்கலாக 800 பிரதிநிதிகள் பங்குபற்றுவதுடன், தற்போதைய பாதுகாப்பு பின்னணி, முரண்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பு, பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுதல் மற்றும் தற்கால பாதுகாப்பு பின்னணியில் இராணுவத்தினரை தயார் நிலையில் வைத்திருத்தல் போன்ற உப தலைப்புகளின் கீழ் இம்மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.

2019 கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் அனைத்து ஏற்பாடுகளும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பூரண மேற்பார்வையின் கீழ் நடைபெறுவதுடன், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொடவினால் மாநாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Related posts

மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு

Mohamed Dilsad

Railway unions to launch another strike

Mohamed Dilsad

C350 – C360 வரையான பாகங்கள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டன

Mohamed Dilsad

Leave a Comment