Trending News

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

(UTVNEWS|COLOMBO) – நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், கம்பஹா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டிலும் காற்றுடன் நிலைமை மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம், மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

CID records a statement from Rajitha

Mohamed Dilsad

சில மர்ம நபர்கள் எரிபொருள் நிலையத்தில் கொள்ளை

Mohamed Dilsad

ஐ.தே.க உறுப்பினர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க குழு நியமனம்

Mohamed Dilsad

Leave a Comment