Trending News

எதற்காக 99 ; நூறாக மாறுமா?

வழமைக்கு மாற்றமான பந்து வீச்சு முறைமையை தன்னகத்தே கொண்ட பந்து வீச்சாளர் லசித் மலிங்க. 2004 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் கால்பதித்தார் லசித்.

இவருடைய கிரிக்கெட் பயணத்தில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககிண்ண தொடர் இவரது கிரிக்கெட் வாழ்கையில் அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது எனலாம். அந்த உலகக்கிண்ண தொடரில் தென்ஆபிரிக்கா அணிக்கு எதிரான போட்டில் நான்கு பந்துகளில் அடுத்து அடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி உலகை தன் பக்கம் ஈர்த்தார்.

அன்று முதல் இன்று வகை அவரது கிரிக்கெட் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது எனலாம். உலகம் முழுதும் ரசிகர்களை கொண்ட ஒரு சில விளையாட்டு வீரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் அதிக எட்ரிக் சாதனையை தன் வசம் வைத்துள்ள லசித். நியூஸ்லாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறினார்.

இலங்கை அணியில் 99 ஆவது டெஸ்ட் வீரராக அறிமுகமாக லசித் மலிங் ஒரு நாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் தனது இலக்கமாக 99 பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. இருபதுக்கு 20 கிரிக்கெட் வாழ்கையில் 19.53 என்ற தனது சரசரியை கொண்டுள்ள லசித் மலிங்க. மேலும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 100 வீழ்த்தியவர்களில் முதலாவது நபராக திகழ்வார். அவருக்கு எமது வாழ்த்துக்கள்

Related posts

Thousands flee advancing California wildfire

Mohamed Dilsad

அரசாங்க வைத்தியசாலையாகும் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை

Mohamed Dilsad

ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் மறுசீரமைப்பு

Mohamed Dilsad

Leave a Comment