Trending News

எவன் கார்ட் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTVNEWS | COLOMBO) – எவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்டோர் தொடர்பான எவன் கார்ட் வழக்கை விசாரணை செய்யும் ட்ரயல் எட் பார் மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்று(10) சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக 7573 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடர உள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி மற்றும் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், ஹிக்கடுவை கடற்பகுதியில் எம்.வி. எவன்கார்ட் என்ற கப்பலினுள் உரிய ஆவணங்கள் இன்றி, 816 தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 290,035 தோட்டாக்களை வைத்திருந்ததன் ஊடாக பிரதிவாதிகள் குற்றம் இழைத்துள்ளார்கள் என குற்றம் சுமத்தி, சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Inflation decreases in April

Mohamed Dilsad

Injured Kusal Perera ruled out of first two ODIs

Mohamed Dilsad

Heavy security to ensure safety at Kandy Perahera

Mohamed Dilsad

Leave a Comment