Trending News

கோட்டாபய முன்வைத்த மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவு

(UTVNEWS | COLOMBO)  – மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையான எவன் கார்ட் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள முறை தவறானது என்பதனால் தன்னை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனுவை நிராகரிக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை வழங்கியிருந்தது.

குறித்த உத்தரவு சட்டவிரோதமானது என தெரிவித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.

எவன்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 11.4 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தான் உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இன்று(21) காலை முதல் மின்சாரம் தடை

Mohamed Dilsad

18-Hour water cut in Colombo suburbs

Mohamed Dilsad

Laos Dam Collapse Many Feared Dead

Mohamed Dilsad

Leave a Comment