Trending News

14 இலட்சம் கொள்ளை – சந்தேகநபர் கைது

(UTVNEWS|COLOMBO) – இரத்தினக்கல் ஒன்றை கொள்வனவு செய்ய வந்த நபரிடம் இருந்த 14 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட-மேல்மாகாண வடக்கு இலஞ்ச ஊழல் மோசடி பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தானையிலுள்ள வீட்டில் வைத்து 35 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

Premier arrives in Beijing

Mohamed Dilsad

நம்பிக்கையில்லா பிரேரணயின் போது வாக்களித்த SLFP உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானம்

Mohamed Dilsad

UPDATE: Seven killed, several injured in Grandpass building collapse

Mohamed Dilsad

Leave a Comment