Trending News

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ஒத்திவைக்கும் இலக்கு

(UTVNEWS | COLOMBO) – காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி அப்பகுதி குடியிருப்பாளர்கள் 3 பேர் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தலை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2018 பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற பிரதேச சபை தேர்தலின் போது ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியால் எல்பிட்டிய பிர​​தேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அக்கட்சியின் வேட்பாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அதன் அப்படையில் குறித்த மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரையில் அந்த பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

பின்னர் குறித்த வழக்கு கடந்த மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்பத்தில் எல்பிட்டிய பிரதேச சபைக்கு தேர்தலை உடனடியான நடத்துமாறு உயர் நீதிமன்றம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலிஸ் OIC க்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டு சிக்கிக் கொண்ட நபர்

Mohamed Dilsad

Fourth EU – Sri Lanka dialogue on investment and trade strengthens economic ties

Mohamed Dilsad

பேருந்து கட்டண குறித்து ஆராய்வு

Mohamed Dilsad

Leave a Comment