(UTVNEWS|COLOMBO) – மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட மற்றும் ஜனாதிபதி செயலணியின் கொள்கைவகுப்பு மேன்முறையீட்டு சபையின் தலைவர் K.A. சோமசிறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மின்சார சபைக்கு மேலதிகமாக மின்சாரத்தைக் கொள்வனவு செய்தமை மற்றும் எரிபொருள் கொள்வனவு தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலான சாட்சிகளைப் பதிவுசெய்வதற்காக கலாநிதி சுரேன் பட்டகொட இன்று(18) அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மின்சாரக் கொள்வனவின்போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலான சாட்சியங்களைப் பதிவுசெய்வதற்காக K.A. சோமசிறி அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.