Trending News

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபிற்கு அமைச்சரவை அனுமதி

(UTVNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபிற்கு அமைச்சரவை நேற்று(17) அங்கீகாரமளித்துள்ளது.

புதிய சட்ட வரைபில் பயங்கரவாதம் குறித்த வரையறையை வழங்கியுள்ளதோடு முன்னைய பயங்கரவாத தடை சட்டத்தில் இல்லாத புதிய அம்சங்கங்களும் அதில் உள்ளடக்கியுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்தை கையாள்வதற்கு பிரிட்டன் மற்றும் இந்தியாவில் உள்ள சட்டங்களை மாதிரியாகக் கொண்டதான புதிய வரைபில், இணையத்தள குற்றங்கள், கண்காணிப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான திலக் மாரப்பன, தலதா அத்துகோரல, சம்பிக்க ரணவக்க ஆகியோரின் பரிந்துரைகளை உள்ளடக்கியதாக குறித்த புதிய வரைபு தயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா

Mohamed Dilsad

රතන හිමියෝ නතර වෙති

Editor O

“Sri Lanka-China trade up by 46% in 5-years” – Minister Rishad Bathiudeen

Mohamed Dilsad

Leave a Comment