(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக டெங்கு ஒழிப்பு பிரிவு கூறியுள்ளது.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்தில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது, நகர் புறங்களில் நுளம்புகள் பரவும் இடங்கள் அதிகமாகி இருப்பதனால் டெங்கு பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.