Trending News

பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம் –  பிரதமர் இம்ரான்

(UTVNEWS | COLOMBO) – பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“.. இந்திய அரசு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதுடன், 370-வது சட்டப்பிரிவை இரத்து செய்யும் முடிவையும் திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் இதுவரை இல்லாத அளவு மிகவும் உறுதியுடன் காஷ்மீர் பிரச்சினையை எடுத்துவைப்பேன். பாகிஸ்தானில் இருந்து யாராவது ஜிஹாத் போராட்டத்திற்காக காஷ்மீருக்கு சென்றால், காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைக்கும் முதல் நபராக நான் ஆகிவிடுவேன். அதோடு காஷ்மீர் மக்களின் எதிரியாகவும் நான் கருதப்படுவேன். காஷ்மீர் மக்களை படைகளால் முற்றுகையிட்டு தாக்குவதற்காக இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும்…” என தெரிவித்துள்ளார்.

Related posts

‘2024 වසරේ ශ්‍රී ලාංකිකයා මහ බැංකු අධිපති ආචාර්ය නන්දලාල් වීරසිංහ

Editor O

Landslide warnings to continue

Mohamed Dilsad

Showers to continue in many areas – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment