(UTVNEWS|COLOMBO) – நோலெட்ஜ் மோகன்டைசிங் நிறுவனத்தின் மற்றும் ஒரு சர்வதேச தரம் வாய்ந்த ஆன்லைன் பரீட்சை மையம் பம்பலப்பிட்டியில் இருக்கும் யுனிட்டி பிளாசாவில் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள் குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீனினால் அவர்களினால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், உயர் கல்வி பிரதி அமைச்சருமான மையோன் முஸ்தபா அவர்களின் பிரசன்னத்துடன் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் தலைவர் ஹபீல் ஏ ஹகீக் உரையாற்றுகையில், இந்நிறுவனம் உலகப்பிரபல்யம் வாய்ந்த ஆங்கில கற்கை நெறி ஆராய்ச்சி நிறுவனமாகும் ETS நிறுவனத்தின் சர்வதேச தரம்வாய்ந்த கற்கை நெறியை இலங்கையில் இருக்கும் ஆங்கிலம் கற்கும் மாணவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது என்றார்
இம்முறையில் ஆங்கிலம் கற்கும் மாணவர்களின் ஆங்கில கற்கை தேவைகளை உடனடியாக அறிந்து கொள்வதோடு அவர்களுக்கு தேவையான ஆங்கில கற்கை நெறியை போதிக்க கூடியதாக உள்ளதாகவும் அவர்களின் ஆங்கில கற்கை நெறி வளர்ச்சியை எவ்வேளையிலும் அவதானிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றிய அமைச்சர் தெரிவிக்கையில், இந்நிறுவனத்தின் இலங்கையில் ஆங்கிலம் கற்கும் மாணவர்களுக்கு மிகவும் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் எனவும், சர்வதேச தரம் வாய்ந்த பரீட்சை யாகையால் இதனூடாக வெளிநாடுகளில் இலகுவாக தொழில் வாய்ப்புகளை பெற முடியும் எனவும், இவ்வாறான சேவைகள் கிராமப்புற மாணவர்களையும் சென்றடைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார் . இவ்வைபவத்தில் கல்விசார் மற்றும் தொழில் வாய்ப்பு நிறுவனகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.