Trending News

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை நிராகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்திருந்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அமெரிக்கா பிரஜாவுரிமை பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் குடியுரிமை சட்டம் மற்றும் தேர்தல் சட்டம் என்பவற்றை மீறி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் கோரிக்கை விடுத்திருந்தது.

குறித்த கோரிக்கையையே கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

Mohamed Dilsad

Thailand donates B2m to help flood-stricken Sri Lanka

Mohamed Dilsad

உள்நாட்டுக் கிழங்கு வகைகளை பிரபல்யப்படுத்த நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment