Trending News

நாட்டின் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலையில், அடுத்த சில நாட்களில்மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென், சப்ரகமுவ,மத்தியமற்றும் மேல்மாகாணங்களில்சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகவும் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்குமாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

நாட்டில் மீண்டும் பாதுகாப்பை பலப்படுத்துவோம் – கோட்டாபய

Mohamed Dilsad

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவு…

Mohamed Dilsad

மேலும் கால அவகாசம் வழங்கியுள்ள சவுதி

Mohamed Dilsad

Leave a Comment