Trending News

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

காலி இறப்பர் தொழிற்சாலையில் தீப்பரவல்

Mohamed Dilsad

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன விளக்கமறியலில்

Mohamed Dilsad

MH17 crash: ‘Key witness’ released in Ukraine

Mohamed Dilsad

Leave a Comment