Trending News

மாத்தறை, கிரிந்த சம்பவம் – கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்து

(UTVNEWS|COLOMBO) – மாத்தறை, ஹக்மன, கிரிந்தவில் ஏற்பட்ட அசம்பாவித நிலமைகள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமைச்சர் ரிஷாட்டிடம் தெரிவித்தார்.

இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் வன்முறைகளாக தலையெடுத்த போதே, அது தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொலிஸ் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த பிரதேச பள்ளிவாசல் தர்மகர்த்தா தலைவருடனும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாடியதோடு நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

இந்தச் சம்வத்தை அடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரிடம் உறுதியளித்த பிரதிப்பொலிஸ்மா அதிபர் வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை அறிந்த அந்த பிரதேச பௌத்த மத குருமார், இஸ்லாமிய பெரியார்கள் ஒன்று கூடி அமைதியை நிலைநாட்டுவது தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

තවත් ගුවන් යානයක් අනතුරට ලක්වෙයි

Editor O

AB de Villiers expresses interest in playing The Hundred

Mohamed Dilsad

පාර්ලිමේන්තු නිලධාරියෙක් සමග වාදයක පැටලුණ මන්ත්‍රීවරයාගේ ධූරය, නීතිය ඉදිරියේ අභියෝගයට ලක්වෙයිද..?

Editor O

Leave a Comment