(UTVNEWS|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் மத்திய, ஊவா, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டை சூழவுள்ள சில கடற்பிரதேசங்களில் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.