Trending News

விஷேட தேவையுடைய இராணுவத்தினரின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

(UTVNEWS | COLOMBO) –கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக விஷேட தேவையுடைய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தேர்தல் காலம் என்பதால் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்ததாக இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் U.D. வசந்த தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சினை உட்பட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து விஷேட தேவையுடைய மற்றும் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் கடந்த 20 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Eric Molina banned after failing doping test

Mohamed Dilsad

Several Parliamentarians sworn in as Ministers

Mohamed Dilsad

வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதி

Mohamed Dilsad

Leave a Comment