Trending News

MCC இன் தலைமைப் பதவியை பொறுப்பேற்றார் சங்கக்கார

(UTVNEWS|COLOMBO) – லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவர் பதவியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார இன்று பொறுப்பேற்றுள்ளார்.

குமார் சங்கக்கார இன்று தனது பதவியை பொறுப்பேற்றுள்ளதுடன், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதம் வரை அதன் தலைவராக கடமையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் கடந்த மே மாதம் லோட்ஸில் இடம்பெற்ற போது தற்போதைய தலைவர் அந்தோனி ரைபோர்ட், எம்.சி.சி. கழகத்தின் அடுத்த தலைவராக குமார் சங்கக்காரவை அறிவித்தார்.

லண்டனின் லோர்ட்ஸ் பகுதியில் 1787 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மேரில்போன் கிரிக்கெட் கழகம் கிரிக்கெட் விளையாட்டினுடைய விதிமுறைகளை முதல் தடவையாக உருவாக்கியதோடு, இந்த கழகம் உருவாக்கிய கிரிக்கெட் விதிமுறைகளையே சர்வதேச கிரிக்கெட் சபை(ICC) பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

08ம் திகதி ஐ.தே.கட்சியின் எதிர்ப்பு போராட்டம்

Mohamed Dilsad

Zimbabwe teachers to strike over pay as currency crisis deepens

Mohamed Dilsad

சஜித்தின் கீழ் நானே பிரதமர் – ரணில்

Mohamed Dilsad

Leave a Comment