Trending News

மிடாக் புயல் – 06 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – தென்கொரியாவில் மிடாக் புயல் தாக்கியதைத் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கிழக்கு பிராந்திய பகுதிகளில் இது வரை 500 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், தென் கொரியாவின் 1,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நவம்பர் மாதம் முதல் தேசிய மின்சார கட்டமைப்பு – புதிதாக மெகாவோட்ஸ் 100

Mohamed Dilsad

Weather today

Mohamed Dilsad

5000 ரூபா நாணயத்தாள் ரத்து?

Mohamed Dilsad

Leave a Comment