Trending News

பலாலி விமான நிலையம் – யாழ். சர்வதேச விமான நிலையமாக மாற்றம்

(UTVNEWS|COLOMBO) – பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச விமான நிலையமாக இருந்து வந்த யாழ்ப்பாண பலாலி விமான நிலையம் பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணி போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமானது.

குறித்த இந்த அபிவிருத்தி பணிகள் இந்த மாதம் 10 ஆம் திகதி அளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாசியுடன் எதிர்வரும் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

වර්ජනයේ නිරත වෛද්‍යවරු රජයට අනතුරු අඟවයි

Mohamed Dilsad

One-day service by Monday – Registration of Persons Dept.

Mohamed Dilsad

எரிந்து சாம்பலான விஜய்யின் டிசைனர் சென்ற கார்!

Mohamed Dilsad

Leave a Comment