Trending News

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் தினைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி இடையே இன்று(29) மாலை சந்திப்பு

Mohamed Dilsad

Duleep Mendis recalled by SLC?

Mohamed Dilsad

கதிர்காமம் பகுதியில் துப்பாக்கி சூடு; நபர் ஒருவர் பலி

Mohamed Dilsad

Leave a Comment