Trending News

இந்திய கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக சவுரவ் கங்குலி தெரிவு

(UTV|COLOMBO) – இந்திய கிரிக்கெட் நிறுவனத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

47 வயதான சவுரவ் கங்குலி கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2008 வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவராகவும் ஐ.பி.எல்.போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.

இதேவேளை கர்நாடகாவைச் சேர்ந்த பிரிஜேஷ் பட்டேல் ஐ.பி.எல். நிர்வாகக் குழுவின் தலைவராக செயல்படுவார். அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா பி.சி.சி.ஐ. செயலாளராகவும், அனுராக் தாகூரின் சகோதரர் அருண் துமால் பொருளாளராகவும், கேரளாவைச் சேர்ந்த ஜாயேஷ் ஜார்ஜ் இணைச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 23 ஆம் திகதி மும்பையில் நடைபெறும் பி.சி.சி.ஐ.யின் ஆண்டுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Rs. 3,546mn soft loan from Austria

Mohamed Dilsad

Man dies during brawl in Badureliya

Mohamed Dilsad

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment