(UTV|COLOMBO) – சமையல் எரிவாயுவை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிக விலையில் சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுவதாக இதுவரை 6 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சமையல் எரிவாயு அதிக விலையில் விற்பனை செய்யப்படுமாயின் அது குறித்து 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு அறிவிக்குமாறு, நுகர்வோர் விவகார அதிகார சபை மக்களை அறிவுறுத்தியுள்ளது.
மோசடியில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கைது செய்வதற்காக, நாடு தழுவிய ரீதியில் விசேட விசாரணைக் குழுவை நியமித்துள்ளதாகவும் குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது.