Trending News

குப்பைகளை அறுவக்காடு பகுதியில் கொட்டும் நடவடிக்கை நிறுத்தம்

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு குப்பைகளை அறுவக்காடு பகுதியில் கொட்டும் நடவடிக்கையை நாளை முதல் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்த கருத்தின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை எடுக்க நேரிட்டுள்ளதாக மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க கொழும்பு மாநகர சபை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

மேலும், அறுவக்காடு குப்பை சேகரிப்பு நிலையம் தோல்வியான ஒரு முயற்சி என கடந்த தினத்தில் கொழும்பு மேயர் பத்திரிகை ஒன்றிற்கு தெரிவித்திருந்ததாக அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மேயரின் கருத்தை மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சு வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Party Leaders to meet today

Mohamed Dilsad

Kurt Cobain cardigan sells at auction for $334,000

Mohamed Dilsad

Top Kashmir militant Sabzar Bhat killed

Mohamed Dilsad

Leave a Comment