Trending News

பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் முன்னிலையில் இன்று (16) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நிதியை பயன்படுத்தி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கூரைத்தகடுகள் விநியோகித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

சீகிரியா சுவரோவியங்களைப் பாதுகாப்பதற்கான திட்டம்

Mohamed Dilsad

மொஹமட் சஹ்ரானின் சகோதரி கைது

Mohamed Dilsad

ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்த தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம்

Mohamed Dilsad

Leave a Comment