Trending News

இராணுவத் தளபதி தொடர்பிலான தேர்தல் விளம்பரம் : ஜனாதிபதியிடம் விளக்கம் கோரி கடிதம் – மஹிந்த

(UTV|COLOMBO) – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவரது கருத்துக்களை முன்வைத்து சில பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடமும், பாதுகாப்புச் செயலாளரிடமும் விளக்கம் கோரி கடிதங்களை அனுப்பியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிகளை மீறி இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் முறைகளை கண்காணிக்கும் நிலையம், இந்த விவகாரத்தை தனது கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்தே ஜனாதிபதியிடமும், பாதுகாப்புச் செயலாளரிடமும் தெளிவுபடுத்தக் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரங்களிலேயே, இராணுவத் தளபதி மற்றும் அதிகாரிகளின் படங்களும், கருத்துக்களும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

අද වෙනස් වන කාලගුණ තත්ත්වය

Mohamed Dilsad

O.J. Simpson joins Twitter after 25 years of his arrest

Mohamed Dilsad

ව්‍යාපාරික සුරේන්ද්‍ර වසන්ත වෙඩි තැබීමකින් ජීවිතක්ෂයට

Editor O

Leave a Comment