(UTV|COLOMBO) – இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கான தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் செத்தல் மிளகாய் ஒரு கிலோவிற்கான வரி 25 ரூபாவில் இருந்து 5 ரூபா குறைத்து 20 ரூபாவாக அறவிட வாழ்க்கைச் செலவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் மீன் ஒரு கிலோவிற்கான வரி 100 ரூபாவிலிருந்து 25 ரூபா குறைத்து 75 ரூபாவாக அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கும் வாழ்க்கைச் செலவுக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.