(UTV|COLOMBO) – எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப மாட்டோம் என பங்களாதேஷ் அணி தலைவர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பங்களாதேஷ் பிரிமீயர் லீக் மற்றும் டாக்கா பிரிமீயர் லீக்கில் விளையாடும் உள்நாட்டு வீரர்களுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னணி வீரர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கிரிக்கெட் விளையாடமாட்டோம் என ஷாகிப் அல் ஹசன், மெஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம் உட்பட முன்னணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் கிரிக்கெட்டில் ஈடுபடப்போவதில்லை. எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் திரும்பமாட்டோம்’’ என ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பங்களாதேஸ் அணி வீரர்களின் இந்த கோரிக்கை காரணமாக இந்தியாவிற்கான அடுத்த மாத சுற்றுப்பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.