Trending News

ஹம்பாந்தோட்டை நகர மேயருக்கு பிணை

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

கடந்த 2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை பகுதிக்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி துப்பாக்கியுடன் ஓடி வந்து மிரட்டியுள்ள நிலையில், பின் அது விளையாட்டுத் துப்பாக்கி என, ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெனாண்டோ தெரிவித்திருந்தார்.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டு அவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Finance Ministry rejects rumours on Retention Tax on children’s savings accounts

Mohamed Dilsad

தென் மாகாண சபை உறுப்பினர் பிணையில் விடுதலை

Mohamed Dilsad

2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய்

Mohamed Dilsad

Leave a Comment