Trending News

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

First Replacement Air Force Group leaves for UN mission in Sudan

Mohamed Dilsad

பாகிஸ்தானை 191 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது இலங்கை

Mohamed Dilsad

(UPDATE) உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 பேர் ஆக உயர்வு

Mohamed Dilsad

Leave a Comment