Trending News

பலத்த காற்றுடன் கூடிய மழை – மீனவர்களுக்கு எச்சரிக்கை

(UTV|COLOMBO) – நாட்டில் கடும்மழை மற்றும் கடுங்காற்று வீசுவதுடன் கடலும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள விசேட வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புத்தளத்தில் இருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையிலான பிரதேசங்களில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இச் சந்தர்ப்பத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப் பிரதேசங்களில் காற்றின் வேகமானது 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும். கடல் நடவடிக்கைளில் ஈடுபடுவோரும் கடல்தொழிலாளர்களும் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, விசேடமாக மேற்கு, வடமேற்கு, வடக்கு ஆகிய மாகாணங்களிலும் கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, வடமேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சியை சில இடங்களில் எதிர்பார்க்கமுடியும் என்றும் வளிமண்டலவில் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ජනපති ඉන්දුනීසියාව බලා පිටත්වෙයි

Mohamed Dilsad

Plane with 100 on board crashes

Mohamed Dilsad

இன்றைய தங்க நிலவரம்

Mohamed Dilsad

Leave a Comment