(UTV|COLOMBO) – கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்னர் துருக்கி மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை தளர்த்தி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
சிரியாவில் ரஷ்ய படையினரை நிலைகொள்ளவைக்க இணக்கம் தெரிவிப்பதாக துருக்கியால் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவால், சிரியாவிலிருந்து படையினர் மீள அழைக்கப்பட்டதன் பின்னர், துருக்கியால் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிராந்தியத்தில் யுத்தத்தை நிறுத்துவதாகவும், அண்மையில் ஒப்புக்கொண்ட போர்நிறுத்தத்தை நிரந்தரமாக்குவதாகவும் துருக்கி உறுதியளித்ததாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.