Trending News

ஜனாதிபதி தேர்தல் – ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவின் அறிக்கை

(UTV|COLOMBO) – இலங்கையில் மறுசீரமைப்பு மற்றும் தேசிய நல்லிணக்க மேம்பாட்டுக்கான பயணத்தில் ஜனாதிபதி தேர்தல் மிக முக்கியமான களமாக பயன்படுத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கண்காணிப்பு பணிகள் முழுமையான ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக இடம்பெறும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் உறுதி செய்துள்ளது.

30 உறுப்பினர்களைக் கொண்ட நீண்டகால கண்காணிப்பு குழு ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் தேர்தல் இறுதி வாரத்தில் மற்றுமொரு குறுகிய கால கண்காணிப்பிற்கான 30 பேரைக் கொண்ட குழு ஒன்று இதில் இணைந்து கொள்ளவுள்ளது.

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னர் முதல் கட்ட அறிக்கையும் இடைக்கால சிபாரிசுகள் மற்றும் முடிவுகளை உள்ளடக்கிய முழுமையான கண்காணிப்பு அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிவருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Suspects arrested in Kalmunai provided accommodation to terrorists

Mohamed Dilsad

Indonesian Naval Ship to set sail from Colombo today [VIDEO]

Mohamed Dilsad

[VIDEO] – Huge fire rips through London tower block

Mohamed Dilsad

Leave a Comment