Trending News

க.பொ.த சாதாரண நுண்கலை செயன்முறைப் பரீட்சை 28 ஆம் திகதி

(UTV|COLOMBO) – 2019 கல்வி பொது தராதர சாதாரண நுண்கலை செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 1,295 மத்திய நிலையங்களில் நடைபெறும் இப் பரீட்சையில் 174,778 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கான அனுமதிப்பத்திரம் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரிட்சார்த்திகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பரீட்டை அனுமதிப் பத்திரத்தில் பாடத்திருத்தம், மொழியில் மாற்றம் அல்லது வேறு ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் உடனடியாக பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை பிரிவு மற்றும் பெறுபேறு கிழைக்கு சமர்ப்பித்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ACMC to support motion expressing confidence in Ranil

Mohamed Dilsad

කලින් ආණ්ඩුව කාලයේ ප්‍රමිතියෙන් තොර යැයි කියූ, ඉමියුනොග්ලොබියුලින් ඖෂධය භාවිතය ගැන සෞඛ්‍ය අමාත්‍යංශයෙන් නිවේදනයක්

Editor O

8,864 drunk drivers arrested since July

Mohamed Dilsad

Leave a Comment