Trending News

மழையுடனான வானிலை மேலும் அதிகரிப்பு

(UTV|COLOMBO) – இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்து வரும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், தற்போது காணப்படும் மழையுடனான வானிலை ஒக்டோபர் 26 ஆம் திகதி இரவிலிருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இலங்கைக்கு தெற்காக காணப்படும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

மழையுடனான வானிலை

Mohamed Dilsad

Rainfall to enhance tomorrow – Met. Department

Mohamed Dilsad

බැඳුම්කරේ වගකීම කාගෙද…? හිටපු ඇමති රවී කරුණානායකගෙන් ප්‍රකාශක්

Editor O

Leave a Comment