(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட பிரிவு ஒன்றை ஸ்தாபித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தேர்தல் காலங்களில் அரச அதிகாரிகளால் இழைக்கப்படும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பில் குறித்த இந்த பிரிவில் முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 24 மணத்தியாலங்களும் செயற்படும் இந்த பிரிவில் பொது மக்கள் தமது முறைப்பாடுகளை 1996 என்ற துரித தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து பதிவுச் செய்ய முடியும் என்பதுடன், 011 250 5574 என்ற தொலைநகல் இலக்கத்தின் ஊடாகவும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி, தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்கும் பிரிவு, அல்லது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலக்கம் 14, ஆர்.டீ.டிமெல் மாவத்தை கொழும்பு – 04 என்ற முகவரிக்கும் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும் என தெரிவித்துள்ளது.