(UTV|COLOMBO) – தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் 28ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த, அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, 28ஆம் திகதி விடுமுறை தினத்திற்குப் பதிலாக, பிரிதொரு தினத்தில் பாடசாலையை நடத்துவதற்கு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.