(UTVNEWS | COLOMBO) – தன்னைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு குற்றப்புலானாய்வு பிரிவினருக்கு கொழும்பு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி அப்பட்டமான பொய்யென முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான எந்த அறிவித்தல்களும் தமக்கு கிடைக்கவில்லை எனவும், அரசியல் விரோதம் கொண்டவர்களால் இந்த செய்தி திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கைது செய்யும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவும் இல்லை என்பதையும் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன்.