Trending News

நாடளாவிய ரீதியில் மழையுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO) – இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்து வரும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்று(26) இரவில் இருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, வடக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

தென்கிழக்கு கடற்பரப்புகளில் காணப்படும் குறைந்த மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, ஹம்பாந்தோட்டையில் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் கடும் மழை, இடியுடன் கூடிய மழை, திடீரென்று கடல் கொந்தளித்தல் மற்றும்காற்றின் வேகமானது அவ்வப்போது 70-80 கிலோமீற்றர் வரை திடீர் என்று அதிகரித்தல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இலங்கைக்கு தென்கிழக்கு மற்றும்கிழக்காக காணப்படும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையில் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Related posts

இலங்கைக்குள் மரண தண்டனையை அமுல்படுத்த ஐ.தே.க எதிர்ப்பு

Mohamed Dilsad

ACS Hameed: A symbol of communal harmony

Mohamed Dilsad

Rameswaram fishermen claim their catch damaged by Lankan Navy

Mohamed Dilsad

Leave a Comment