(UTV|COLOMBO) – தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரி இல்லாத வாகன உரிம கொடுப்பனவினை நிறுத்துவதாக புதிய ஜனநாயக முன்னணிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.
திக்வெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இதனூடாக கிடைக்கும் பணத்தினை மக்கள் தேவைக்காக செலவிட முடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.