(UTV|COLOMBO) – சில தனியார் நிறுவனங்களிலும் பிரத்தியேக வகுப்புக்களிலும் மாதிரி வாக்கெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு அவற்றின் பெறுபேறுகள் சமூகவலைத்தளங்களிலும் வெளியிடப்படுகின்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவை ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு முரணானதாகும் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது.
இதனால் இவ்வாறான மாதிரி வாக்கெடுப்புக்களை நடத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணைக்குழு உரிய தரப்புக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.