(UTV|COLOMBO) – அமெரிக்காவின் வடக்கு மற்றும் மத்திய கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக 2 மில்லியனிற்கும் அதிகமான மக்கள் மின்சாரமின்றி அவதியுறுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
காட்டுத் தீ ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வைத்துள்ளதோடு பல வீடுகள் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.
குறித்த பகுதியில் பலத்த காற்று வீசுவதனால், காட்டுத் தீ மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கதிற்காக, 36 மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்று(26) சனிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை(28) மதியம் வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.