(UTV|COLOMBO) – எல்ல, வெல்லவாய வீதி மீள் அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (25) குறித்த வீதியின் 25/1 போக்குவ பகுதியை அண்மித்த பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டு மண் மட்டும் கற்கள் சரிந்து வீதிகளில் விழுந்துள்ளதால் அங்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதன் காரணமாக குறித்த வீதியை நேற்று(25) மாலை 6.00 மணி தொடக்கம் இன்று(26) காலை 6.00 மணி வரை மூட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தீர்மானித்தது.
எவ்வாறாயினும், மண்சரிவுக்கு உள்ளான குறித்த பகுதியில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் தொடர்ந்தும் ஆய்வினை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.