(UTV|COLOMBO) – மினுவங்கொடை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மானம்மன பிரதேசத்தில் அமைந்துள்ள தேங்காய் தொழிற்சாலை ஒன்றில் இன்று(26) மதியம் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
மினுவங்கொடை பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவின் உதவியுடன் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் சுமார் 50 ஊழியர்கள் அங்கு பணியில் இருந்ததாக தெரிவிக்கப்படுவதோடு, தீயினால் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.