Trending News

முதலாவது சர்வதேச இருபதுக்கு- 20 போட்டியில் அவுஸ்திரேலிய வெற்றி

 (UTVNEWS | COLOMBO) – இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு – 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

அடிலெய்டில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று, முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 233 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் டேவிட் வேர்னர் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும் ஆரன் பின்ச் 64 ஓட்டங்களையும் மெக்ஸ்வெல் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு போட்டியில் வெற்றிபெற 234 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பொடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

Related posts

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர்

Mohamed Dilsad

மதுபான சாலைகளுக்கு பூட்டு

Mohamed Dilsad

இந்தோனேசிய ஜனாதிபதியாக மீளவும் ஜோக்கோ விடோடோ பதவியேற்பு

Mohamed Dilsad

Leave a Comment