Trending News

மழையுடனான வானிலை இன்றிலிருந்து அதிகரிக்கும்

(UTVNEWS | COLOMBO) –இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்து வரும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், மழையுடனான வானிலை இன்றிலிருந்து அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவ்வாறான நிலை காணப்படும் எனவும் நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில், குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பிரதேசங்களில் ஏனைய இடங்களில்100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை…

Mohamed Dilsad

கற்குகையொன்றில் இருந்து சடலம் மீட்பு…

Mohamed Dilsad

පළාත් පාලන මැතිවරණය තවදුරටත් කල්යාමේ අවදානමක්

Mohamed Dilsad

Leave a Comment