Trending News

தென் ஆபிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

(UTVNEWS | COLOMBO) -றக்பி உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வேல்ஸை வீழ்த்தி தென் ஆபிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

யோகோஹாமாவில் ஆரம்பான குறித்த போட்டியின் இறுதியில் தென்னாபிரிக்க அணி 19:16 என்ற கணக்கில் வேல்ஸ்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது.

குறித்த போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்க அணியின் ஹேண்ரி பொல்லார்ட் தேர்வானார்.

 

முதலாவது அரையிறுதி போட்டியில் நியூஸ்லாந்து அணியை வீழ்த்தி  இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி யோகோஹாமாவில் இடம்பெறவுள்ள 2019 ஆம் ஆண்டு றக்பி உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Related posts

Trump urges China to investigate Bidens

Mohamed Dilsad

Facebook animal trade exposed in Thailand

Mohamed Dilsad

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

Mohamed Dilsad

Leave a Comment