Trending News

அரசியல் அமைப்பு சூழ்ச்சியை தோற்கடிக்க முடிந்தமை ஜனநாயக வெற்றி – பிரதமர்

 (UTVNEWS |COLOMBO) –ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சிக்கு கௌரவம் அளிக்கும் சகலருக்கும் இன்றைய தினம் முக்கியத்துவம் வாய்ந்ததென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆணை மூலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சூழ்ச்சி மூலம் நீக்கப்பட்டு இன்று ஒருவருடம் பூர்த்தியடைகின்றது. இதனைத் தொடர்ந்து 52 நாட்களின் பின்னர் ஜனநாயகத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடிந்ததாக நேற்றைய தினம் விசேட அறிக்கையொன்றின் மூலம் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது அரசாங்கம் பெற்ற வெற்றி மாத்திரமல்லாதுஇ முழு இலங்கைக்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் சுட்டிக்காட்டினார். அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் ஜனநாயகம்இ சுதந்திரம் மற்றும் சுயாதீனமான சூழலை கட்டியெழுப்புவதற்கு முடிந்ததாக தெரிவித்துள்ள பிரதமர் நீதிமன்றம்இ பொலிஸ்இ அரச சேவை உள்ளடங்கலான நிறுவனங்கள் இந்தத் திருத்தச் சட்டத்தின் மூலம் பலமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீதிமன்றங்கள் எந்தவொரு அழுத்தங்களுக்கும் அப்பால் நின்று தீர்ப்பு வழங்கும் பின்னணி இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரை நியமிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளது. இதேவேளைஇ பிரதமர் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறவேண்டியவர் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

பொய் சொல்லி மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியரால் பரபரப்பு

Mohamed Dilsad

இன்றைய தினம் நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் இல்லை

Mohamed Dilsad

12-Year-old set for amateur MMA debut on May 20 in Japan

Mohamed Dilsad

Leave a Comment