(UTV|COLOMBO) – கொழும்பு – ஜம்பட்டா வீதியில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுவெல, ஹேவாகம பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், பயன்படுத்தப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகளும் மோட்டார் சைக்கிள்களும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.